அ.தி.மு.க. பா.ஜ.க. உறவு முறிந்தது
Share
தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுப்பினராக இருந்து வந்த அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் சில மாதங்களாக உரசல் நிலவி வந்தது. பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்த சில கருத்துக்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது. அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைமை பொறுப்பில் இருந்து நீக்க அ.தி.மு.க.வினர் கோரி வந்தனர். இந்நிலையில் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் நிலவி வந்த உறவு முறிந்தது என அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இக்கட்சியின் முக்கிய தலைவரான கே.பி. முனுசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.













