ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Share
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார். இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அடுத்த படத்தின் பதிவேற்றத்தையும் கொடுத்துள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.













