கர்நாடகாவில் முழு அடைப்பு’: தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும்
Share
காவேரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பிற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால், தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ர்நாடகத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவேரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் கடந்த 18-ந் தேதி விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். அங்கு விவசாயிகள் தொடர்ந்து தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திற்கு காவேரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) கா்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் பெங்களூருவில் இன்று இரவு முதல் நாளை இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, இன்று கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதால் தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.













