LOADING

Type to search

சினிமா

ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சூர்யா

Share

சாலை விபத்தில் உயிரிழந்த தன்னுடைய ரசிகரின் வீட்டுக்கே சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்தான் அரவிந்த். 24 வயதான இவர், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு நடிகர் சூர்யா ரொம்பவே மனமுடைந்து போனதாக தெரிகிறது. அந்த நேரத்தில், நடிகர் சூர்யா கங்குவா படப்பிடிப்பில் இருந்ததால், அரவிந்தின் இறுதி சடங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சென்னை எண்ணூரில் இருக்கும் அரவிந்த் வீட்டிற்கு நேரடியாக சென்று சூர்யாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அரவிந்த் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.