LOADING

Type to search

இந்திய அரசியல்

திருச்சி முதல் பெங்களூரு ‘இஸ்ரோ’ வரை தேசப்பக்தி விழிப்புணர்வு யாத்திரை – காந்தியவாதி கருப்பையா

Share

திருச்சி மாவட்டம், மணப்பாறை, ஆலத்தூரில் இருந்து, தேசபக்தியை வலியுறுத்தி, மதுரையை சேர்ந்த காந்தியவாதி கருப்பையா கடந்த, 21ம் தேதி, கர்நாடகா மாநிலம், பெங்களூரு, ‘இஸ்ரோ’ வரை சைக்கிளுடன் பாதயாத்திரையை தொடங்கினார். திருச்சியில் புறப்பட்டு, பெங்களூரு ‘இஸ்ரோ’ வரை பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையா, நாமக்கல் வந்தார். நாமக்கல் வந்த அவரை, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, அறிவியல், உலக சுற்றுச்சூழல், சுகாதாரம் பற்றி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்த தேசபக்தி பாதயாத்திரையை தொடங்கியதாக கருப்பையா தெரிவித்தார்.

இந்த யாத்திரை, திருச்சி மாவட்டம், ஆலத்துாரில் துவங்கி, கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு இஸ்ரோ வரை, 500 கி.மீ. துாரம் செல்வதாக தெரிவித்தார். வரும் அக்.16ம் தேதி, இந்த யாத்திரை நிறைவு பெறும் என்றும், செல்லும் இடங்களில், தேச பக்தியை வலியுறுத்தி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வருவதாக தெரிவித்த அவர், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஆதரவு அளித்து வருவதாக கூறினார். தொடர்ந்து, காந்தியவாதி கருப்பையா, சைக்கிளுடன் மக்களிடையே தேச பக்தியை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றது காண்போரை வியப்படைய செய்தது.