LOADING

Type to search

சினிமா

சலார் படத்தின் வெளியீடு தேதியை உறுதி செய்தது படக்குழு!

Share

கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. இதற்கு முன் இவர் இயக்கிய கே.ஜி.எப் படங்கள் சக்கைப்போடு போட்டதால், சலார் படமும் அதேபோல் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், செப். 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால், படத்தை டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.