உதகையில் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர் பணியிடை மாற்றம்
Share
உதகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி உதகையில் என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற்றது. அப்போது, அண்ணாமலைக்கு உதகை பாஜக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊர்வலத்தின் போது நீலகிரியில் காவலர் கணேசன் சீருடையோடு அண்ணாமலையோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது. இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட ஹில்காப் துறையில் பணியாற்றிய காவலர் கணேசன் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்













