குமரியில் பிடிபட்ட 6 பேரிடம் இருந்து ரூ. 36 கோடி மதிப்பிலான ‘ஆம்பர் கிரீஸ்’ பறிமுதல்
Share
திமிங்கிலத்தின் செரிமான உறுப்பில் இருந்து வெளியேறும் உமிழ்நீர்( வாந்தி மூலம் ) ஒரு வகை திடக்கழிவு பொருள் ஆகும். இதை ஆம்பர்கிரீஸ்
என்று அழைப்பார்கள். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு அதிகம் ஆகும். உயர் தரமான வாசனை திரவியங்கள், செக்ஸ் சம்பந்தமான மருத்துவ பொருட்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு இது பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்பர்கிரீசை வெளிநாடுகளுக்கு கடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளவை சேர்ந்த ஒரு கும்பல் திமிங்கலம் உமிழ்நீரை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு கடத்தி வந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத்துக்கு வந்த தகவலின்
பேரில் தனிப்படை எஸ். ஐ அருளப்பன் தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தி, நேற்று முன்தினம் மாலை கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விவேகானந்தன்(49),
கொல்லத்தைச் சேர்ந்த நிஜு(39), திருவனந்தபுரம் மாவட்டம் காரக்கோணம் திரேசியாபுரம் நெடியவிளை புத்தன் வீடு பகுதியை சேர்ந்த ஜெயன்(41), காரக்கோணம் குன்னத்துக்காடுவிளை பகுதியை சேர்ந்த திலீப்(26), பாலக்காடு மாவட்டம் ஒற்றை பாலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(50), பாலக்காடு மாவட்டம் ஒற்றை பாலம் குன்னத்து பாவு கோணம் பகுதியை சேர்ந்த வீரான்(61) ஆகிய 6 பேரை பிடித்தனர்
இவர்களிடம் இருந்து 36 கிலோ அம்பர்கிரீஸ் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட அம்பர்கிரீசின் சர்வதேச சந்தையின் மதிப்பு ரூ. 36 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பிடிபட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடந்தது.
விசாரணையில் இவர்கள் யாருக்கு இதை கடத்தி வந்தனர் என்பது குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. இவர்களின் மொபைல் போனை தொடர்பு கொண்டு பேசியவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்க வனத்துறையினர் தேர்தல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
இங்கிருந்து கப்பலில் வெளிநாடு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. பிடிபட்டவர்களுக்கு இவை எங்கிருந்து எடுக்கப்பட்டது? என்பது குறித்து தெரியவில்லை என கூறினர். இருப்பினும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே இது தொடர்பான முழு விவரம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.













