LOADING

Type to search

இந்திய அரசியல்

“பாஜகவில் மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது” – அண்ணாமலை

Share

பாஜக போன்ற தேசிய காட்சிகளில் மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என்றும், வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்த பிறகு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டில்லி செல்கிறார். இதையடுத்து, கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக கட்சி உடனனான கூட்டணி முறிவு குறித்து கட்சி தலைமை தன்னிடம் எந்த அறிக்கையும் கோரவில்லை என்றார். மேலும், கூட்டணியில் இணைவதும், அதிலிருந்து விலகவதும் அரசியலில் ஒரு அங்கம் தான் என்றும் குறிப்பிட்டார்.

சமூக வலைதளங்களில் கருத்துகள்/எதிர் கருத்துகளைத் பதிவிடுபவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்வது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்த அவர், எதிர் தரப்பினரின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் திறனும், பரிசோதனை மனப்பான்மையும் இல்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரி போல் நடந்துக் கொள்வதாகவும் விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தியே தனது அரசியல் இருக்கும் என்று அண்ணாமலை கூறினார். மேலும், போலியான சமாதானப்படுத்தும் அரசியல் தன்னிடம் கிடையாது என்று தெரிவித்த அவர், யாருக்காவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், பாஜக போன்ற தேசிய காட்சியில் மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது, வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது என்றும் கூறினார். எனவே, பதவிக்காக தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் எடுத்துரைத்தார். மேலும், தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவி இல்லையென்றாலும், கட்சியில் தொடர்ந்து நீடிப்பீர்களாக என்று கேள்விக்கு கோபம் அடைந்த அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.