LOADING

Type to search

இந்திய அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம் – மு.க.ஸ்டாலின்

Share

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினர்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 72 மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்களும், 234 தொகுதி பார்வையாளர்களும் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசிய சில தகவல்கள் வருமாறு: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம்தான் உள்ளது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இதற்காக தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் சரிபார்க்க வேண்டும். விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றதை விட இந்த நாடாளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள். நாடாமன்ற தேர்தல் பணி நம்மை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. எனவே விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. ஆகவே அனைவரும் தேர்தலுக்காக விரைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் தவறாது பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். தொகுதி நிலவரத்தை அவ்வப்போது தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். வருகிற தேர்தலில் கழகத்தின் வெற்றியே முக்கியம் என்கின்ற வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.