தமிழ் பேசும் அமைச்சரின் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களங்களின் வடக்கு அலுவலகங்களில் ‘குவிக்கப்படும்’ ‘தென்னிலங்கை’ உத்தியோகத்தர்களால் தோன்றியுள்ள ‘அபாய எச்சரிக்கை’
Share
ந.லோகதயாளன்.
தமிழ் பேசும் அமைச்சரான சந்திரசேகரன் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களங்களின் வடக்கு மாகாண அலுவலகங்களில் ‘குவிக்கப்படும்’ தென்னிலங்கையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களால் தோன்றியுள்ள ‘எச்சரிக்கை’ தொடர்பாக சமூகஆர்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்
மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தை திட்டமிட்டு முழுமையாக சிங்கள மயமாக்கல் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
வடக்கு மாகாண கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்கள் சிங்கள உத்தியோகத்தர்கள. மூலம் நிரப்பும் படலம் இந்த ஆட்சியில் மிக உச்சம. பெற்றுள்ளபோதிலும் எவரும. கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கம்படுகின்றது.
இதில் அதிகம. சிங்கள மயமாக்கப்படும் முதலாவது அலுவலகமாக மன்னார் அலுவலகம் விளங்குகினறது.
மன்னார் அலுவலகத்திலே தற்போது சகல தரத்திலும் 8 உத்தியோகத்தர்கள் மாத்திரமே பணியில் உள்ளனர். இதனால் அங்கே புதிதாக 10 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட 10 உத்தியோகத்தர்களில் 8 பளர் சிங்கள இனத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களாக காணப்பட்டனர். இதன்போது 10 தமிழ் உத்தியோகத்தர்களும் 8 சிங்கள உத்தியோகத்தர்களுமாக காணப்படுவது தொடர்பில் விசனம் தெரிவித்தபோதும. எவருமே குரல் எழுப்பவில்லை.
இதனைப் புரிந்துகொண்ட கொழும்பு அரசு 10 பேர் உள்ள தமிழ் உத்தியோகத்தர்களில் 4 பேருக்கு 27ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் கட்டாய இடமாற்றம் வழங்கியுள்ளது. இதனால் மன்னாரில் உள்ள மீன்பிடி அலுவலகத்தில் சகல தரத்திலும் 6 பேர் மட்டுமே தமிழ் உத்தியோகத்தர்களாகவும் 8 பேர் சிங்கள மொழி உத்தியோகத்தர்களாகவும் இருப்பதனால் மன்னார் கடற்றொழில் திணைக்களமே விரைவில் சிங்கள மயப்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கட்டாய இடமாற்றம் வழங்கப்படும் 4 தமிழ் உத்தியோகத்தர்களும் மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற கடல் அட்டை ஏலத்தின்போது உதவிப் பணிப்பாளருடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையிலேயே இந்த கட்டாய இடமாற்றம் எனக் கூறப்படுவதனால் இந்த செயல் திட்ட மிட்ட இனச் சுத்திகரிப்பா என சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
தற்போது கட்டாய இடமாற்றம. வழங்கப்படும் 4 உத்தியோகத்தர்களில் ஒருவர் 58 வயதுடையவர் என்பதனைக்கூட கருத்தில் எடுக்கப்படவில்லை எனவும் மாவட்டத்தில் எஞ்சியுள்ள 6 தமிழ் உத்தியோகத்தர்களிலும் இருவர் எதிர் வரும் ஜனவரி மாத்த்துடன் வருடாந்த இடமாற்றத்தின் மூலம் மாற்றலாகி செல்லும் உத்தியோகத்தர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டமானது கடற்றொழிலில் அதிக நெருக்கடிகள், முரண்பாடுகளைக் கொண்ட மாவட்டம் என்பதை தெரிந்தும் இவ்வாறு சிங்கள மயப்படுத்தப்படுவது எதிர் காலத்தில் ஓர் பாரிய சிரகசிய திட்டத்தின் முன்னோடியாகவே கருதப்படுகின்றது.
இதேநேரம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் தலா 4 சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஏற்கனவே இரு சிங்கள ஊழியர்கள் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.










