LOADING

Type to search

இலங்கை அரசியல்

கோப்பாய் மகா வித்தியாலயத்தில் விசேடதேவை உள்ள மாணவர்களின் செயற்திறனை மேம்படுத்தும் ‘திறன் வகுப்பறைச்செயற்பாடு’ அறிமுகம்!

Share

கடந்த 22ம் திகதி வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குள் அடங்கும் கோப்பாய் மகா வித்தியாலயத்தில் IMHO மற்றும் இங்கிலாந்தின் Ratnam Foundation இன் ஏற்பாட்டில் Dr. ஈஸ்வரன் வேலாயுதபிள்ளை அவர்களினதும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பினதும்அனுசரணையுடன் வழங்கப்பட்ட smart board learning class திறன் பலகை கற்றல் உபகரணத்தொகுதி வகுப்பறை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பயன்பாடு அவதானிக்கப்பட்டது.

இப்பாடசாலை யாழ்ப்பாண வலயத்தின் விசேடதேவைகள் உள்ள (special need children) மாணவர்களுக்கான அலகும் உட்படுத்தல்கல்வி (inclusive education) செயற்படும் பாடசாலையாகும். இங்கு 84 மாணவர்களும் (19 விசேட தேவைமாணவர்கள்) 22 ஆசிரியர்களும் கல்விச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.இத்திறன் பலகை உண்மையிலேயே இம்மாணவர்களின் செயற்றிறனை அதிகரிக்கவல்லது இதனை மாணவர்களின்செயற்பாட்டை பார்த்தபோது அளவிடமுடிந்தது ஆச்சரியமாகவும் இருந்தது. விசேடதேவை உள்ள மாணவர்கள் மிகுந்த விருப்புடன் திறன்பலகையில் சித்திரங்களை வரைந்து கற்றலில் ஈடுபட்டனர். மதிப்பீட்டின் போது இடைநிலை பிரிவு மாணவர்களும் சிறப்பாக செயற்பட்டனர்.

இந்நிகழ்வு அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் கல்விச்செயற்பாட்டிற்கான ஆலோசகர் முத்து.இராதாகிருஷ்ணன், யாழ் வலய ஆசிரிய ஆலோசகர் சந்திரிக்கா, இப்பாடசாலையின் அதிபர், பழையமாணவர் சங்க செயலாளர், பாடசாலை அபிவிருத்திச்சபை செயலாளர் ஆகியோரின் சிறப்பான பங்குபற்றலோடு நடைபெற்றது. பாடசாலையின் கல்வி வளர்சிக்கு இத்திறன் வகுப்பறை மிகுந்த ஒரு கொடையாகும் என அதிபரும் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளரும் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய IMHO ஆலோசகர் தனது உரையில் ஆரம்ப பிரிவு,மற்றும் விசேடதேவை மாணவர்களின் அடிப்படை தேர்சிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் திறன்வகுப்பறை செயற்பாட்டை ஆசிரியர்கள் நன்கு திட்டமிடவேண்டும் என குறிப்பிட்டார், நிகழ்வுகள் மிகச்சிறப்பாக அமைந்தன. மாணவர்களின் ஈடுபாடு விதந்துரைக்கத்தக்கது.