LOADING

Type to search

சினிமா

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் ’ஜான் டோ’

Share

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம்  ’ஜான் டோ’. அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ஒரு பதாகை மூலம்  படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இந்த பதாகை, மர்மம் நிறைந்த கதைக்களத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில், காவலர் சீருடையில் இருக்கும் அர்ஜுன் தாஸின் தோற்றம் மையமாக இடம்பெற்றுள்ளது. அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய தடயங்களை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கதாபாத்திரங்களின் முகபாவனைகளும், ஒன்றோடொன்று தொடர்புடையது போன்ற புகைப்படங்களின் தொகுப்பும் படத்தின் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ‘ஜான் டோ’ என்ற தலைப்புடன் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்ட, பிரசாத் தேவினேனி ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர்.