LOADING

Type to search

சினிமா

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது

Share

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரும் தயாரிப்பில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த படத்தின் பிடிஎஸ்  காணொளி தாயரிப்பு நிறுவனமாக வேல்ஸ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. மூக்குத்தி அம்மன் 2′ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.