LOADING

Type to search

சினிமா

அர்ஜுன் தாஸ் நடித்த “ஜான் டோ” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஜான் டோ’ திரைப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரபரப்பான கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தேவினேனி, சோபு யார்லகட்டா ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் மதுமிதா, நிக்கோலஸ் செவாலியருடன் இணைந்து எழுதியுள்ளனர். முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பையும், தினேஷ் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

‘ஜான் டோ’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓ.டி.டி. உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் வருகிற நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.