LOADING

Type to search

சினிமா

விஜே சித்து இயக்கி நடிக்கும் “டயங்கரம்” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

விஜே சித்து இயக்கி நடிக்கும் “டயங்கரம்” படத்தின் முன்னோட்டம் வெளியானது. தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் வி.ஜே.சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய விஜே சித்து தற்போது சித்து விளாக்ஸ் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ‘டிராகன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவில் வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ‘டயங்கரம்’ படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தினை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார் விஜே சித்து. இந்த படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜே சித்துவின் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் காணொளி வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், ‘டயங்கரம்’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.