LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தோல்வியடைந்தார்

Share

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவைப் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாண ஆளுனர் தேர்தலில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஏமி ஆக்டன் வெற்றி பெற்ற்றுள்ளார். 41 வயதான விவேக் ராமசாமியை எதிர்த்து 60 வயதான ஏமி ஆக்டன் போட்டியிட்டார். இதில் 51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஓஹியோ மாகாணத்தின் முதல் பெண் ஆளுனர் என்ற பெருமையை ஏமி ஆக்டன் பெற்றுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஓகியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விவேக் ராமசாமி, இந்தத் தேர்தல் கடுமையான போட்டியாக இருந்தது. சில நேரங்களில் இரு தரப்பிலும் கசப்பான சூழல் நிலவியது. இருப்பினும், ஏமி ஆக்டனின் நிர்வாகம் வெற்றி பெற அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும், தனக்கு ஆதரவளித்த பெற்றோர், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்தார். இந்தத் தேர்தலில் விவேக் ராமசாமிக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் முக்கிய ஆலோசகர்களும் ஆதரவளித்தனர். இருப்பினும் அவர் தோல்வியைச் சந்தித்துள்ளார். விவேக் ராமசாமி, 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்வில் டொனால்டு டிரம்பை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.