LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலில் 31 பேர் பலியானதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்

Share

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 4 காவலர்கள் உள்பட 31 பேர் பலியான சம்பவத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரானது 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் முயற்சி பலனிக்காமல் போகவே, தாக்குதலானது தொடர்ந்து வருகிறது.

இதில் உக்ரைன் மீது ரஷியா தற்போது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் ஜாபோரிஜியா பகுதியில், பள்ளி ஒன்றில் உதவிகளை பெறுவதற்காக மக்கள் கூடியிருந்த முகாம் ஒன்றை இலக்காக கொண்டு, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்கியது. இதில், 31 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 4 பேர் காவலர்கள் ஆவர். உக்ரைனின் மீட்பு பணியாளர்கள் 2 பேரும் பலியாகி உள்ளனர். இந்த தீவிர தாக்குதலில், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தவிர, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 45-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது ரஷியா ஒரே இரவில் 289 அதிநவீன டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைனும் ரஷிய தலைநகர் மாஸ்கோவை நோக்கி நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் பலியான நிலையில், அந்த பகுதியில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.