LOADING

Type to search

சினிமா

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

Share

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘பாம்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் விஷால் வெங்கட். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகர்கள் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமையான கதைகளத்தில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு, ‘மாமன்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் எளிய பூஜையுடன் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் தற்போது திட்டமிட்டபடி முழுமையாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தகட்டத் தயாரிப்புப் பணிகள் மற்றும் பின்னணி குரல் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளன. மிக விரைவில் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் முதல்காட்சி பதாகை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளதால், சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.