LOADING

Type to search

இந்திய அரசியல்

துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு ஆளுனர் அர்லேகர் சந்தித்தார்

Share

துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு ஆளுனர் அர்லேகர் சந்தித்தார். தமிழ்நாடு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். இவர் தமிழ்நாட்டின் முழு நேர ஆளுராக கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே, ஆளுனர் அர்லேகர் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று டில்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரை சந்தித்தார். இந்நிலையில், ஆளுனர் அர்லேகர் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். குடியரசு மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுனர் அர்லேகர் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.