LOADING

Type to search

சினிமா

‘ராமாயணா’ படம் முதல் நாளில் ரூ. 155 கோடி வசூலித்தது

Share

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 155 கோடி என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ படம் நேற்று வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ‘ராமாயணா’ படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், ‘ராமாயணா’ படம் முதல்நாளில் ரூ. 155 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.