தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசுடன் கூட்டணி ஏன்யென தவெகவுக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்
Share
தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசுடன் கூட்டணி ஏன்யென தவெகவுக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கூறும் காங்கிரசுடன் எப்படி தவெகவால் கூட்டு வைக்க முடிந்தது? காங்கிரசுடன் கூட்டு வைத்து இங்கே ஆட்சி அமைத்திருப்பது யார்? மாநில உரிமைகளைப் பறிக்கும் கட்சியுடன் சேர்ந்து எப்படி மக்களின் உரிமைகளை காப்பாற்றுவீர்கள்? முதலமைச்சர் பேசமாட்டார், செயலில் காட்டுவார் என்கிறார்கள். அவர் இதுவரை காட்டிய செயல்களில் ஒன்றையாவது கூற முடியுமா? செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம், துணை சபாநாயகர் விவகாரம் உள்ளிட்டவற்றில் எந்த நடவடிக்கையும் எடுக்க முதலமைச்சருக்குத் துணிவில்லை. நீங்கள் என்ன தூய சக்தி? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வைத் தகுதி நீக்கம் செய்ய முடியாதா? மீண்டும் தேர்தல் நடத்தினால் வெற்றி பெற முடியாதா? அந்த நம்பிக்கை இல்லை என்றால், நீங்கள் எப்படி மாஸ் ஹீரோ? மக்களை சந்திக்க பயம் ஏன்? வென்றால்தான் களத்தில் இருப்பீர்களா? தோற்றாலும் களத்தில் இருப்பவனே வீரன். தலைவன். பெரும்பான்மை முக்கியமல்ல; நேர்மையே முக்கியம்.” இவ்வாறு அவர் கூறினார்.













