LOADING

Type to search

சினிமா

இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதைத்தான் “பிளாக் கோல்ட்” திரைப்படம்

Share

இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதைத்தான் “பிளாக் கோல்ட்” திரைப்படம். எம்.மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “பிளாக் கோல்டு”. அடாவடித்தனம் செய்யும் ஏ.வெங்கடேசனிடம் லோரி ஓட்டுநராக வேலை பார்க்கிறார் லிவிங்ஸ்டன். ஏ,வெங்கடேசனின் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கை லோரியில் ஏற்றிக் கொண்டு லிவிங்ஸ்டன் வரும்போது அந்த சரக்கு லோரியுடன் லிவிங்ஸ்டன் காணாமல் போய்விடுகிறார். அவரை கண்டுபிடித்து தரும்படி காவல்த்துறையில் ஏ.வெங்கடேசன் புகாரளிக்கிறார். லிவிஸ்டனை காவல்த்துறையினரும் தேடுகிறார்கள். வேரொரு கோணத்தில் அவரின் மகன் வெற்றியும் தேடுகிறார். காணாமல் போன அந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு எது? காணாமல் போன லிவிங்ஸ்டன் என்ன ஆனார்?  என்பதுதான் கதை. லிவிங்ஸ்டனின் மகனாக நடித்திருக்கும் வெற்றி, அவர் நடித்திருக்கும் எல்லா படங்களிலும் இறுக்கமான முகத்துடனே நடித்திருப்பார். அந்த தோரணையிலிருந்து அவர் இன்னும் மாறவில்லை. இப்படத்திலும் அவர் இறுக்கமான முகத்துடனேயே நடித்திருக்கிறார். ஓரிரு வார்த்தைகளை வசனமாக பேசுகிறார்.  அவருக்கு வாய்மொழியும் இல்லை. உடல்மொழியும் இல்லை. பாசத்தையும் பதற்றத்தையும் காட்டும்போதுமட்டும் கொஞ்சம் நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். லிவிஸ்டனுக்கு அரிதாரப்பூச்சு அறவே இல்லை. வயோதிகத்தின் முதிர்ச்சி அப்பட்டமாக திரையில் தெரிகிறது. முதலாளியின் விசுவாசத்தையும் பிள்ளைப் பாசத்த்கையும் தத்ரூபமாக நடித்து தனது அனுபவ நடிப்பை திரையில் காட்டியிருக்கிறார். ஏ.வெங்கடேசனும் அருள் டி.சங்கரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் அழுத்தம் இல்லாத வில்லத்தனம். பிரியா லயா, துளசி, தயாரிப்பாளர் மூர்த்தி, கராத்தே வெங்கடேசன் ஆகியோர் கதாபாத்திரத்தின் தனமையை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். கவாஸ்கர் அவினாஸின் இசையும் சந்தோஷ் குமார் வீராசாமியின் ஒளிப்பதிவும் திருப்தியை தருகிறது. பட்த்தொகுப்பில் சந்தோஷ் குமார் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதைக்கருவை கையிலெடுத்து திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.