காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகிறது
Share
அஹம்மது கபீர் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காதல் நகைச்சுவை திரைப்படம் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் படத்தை வெளியிடுகிறார். படத்தில் காளிதாஸ் ஜெயராம், லட்சுமி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா மற்றும் ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஹ்மது கபிர் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அஹம்மது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதையை அஹம்மது கபீர் எழுதியுள்ளார். ஜாபின் ஜான் மற்றும் அஹம்மது கபீர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.













