LOADING

Type to search

சினிமா

‘சிட்டுக்குறிஞ்சி’ படம் நவம்பர் 27-ல் திரையரங்கில் வெளியாகிறது

Share

‘சிட்டுக்குறிஞ்சி’ படம் நவம்பர் 27-ல் திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தில் ராஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், விஜே பப்பு, ஜி.எம். குமார், ராம்ஸ் மற்றும் தோழர் எல்.வி. ஆதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாரா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டி. ஜூட் அனந்த் தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான டீசரைத் தொடர்ந்து தற்போது டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் நவம்பர் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.