LOADING

Type to search

சினிமா

ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்திற்கு ‘தணிக்கை வாரியம் யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது

Share

நடிகர் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘டாடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கணேஷ் கே. பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். அரசியல் பின்னணியில் அதிரடி மற்றும் திரில்லர் கதையம்சத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இதில் ரவி மோகன் அரசியல்வாதியாகவும், கராத்தே மாஸ்டராகவும் இரு பரிமாணங்களில் நடித்துள்ளார். ஷண்முக பாபு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். மேலும், தௌடி ஜிவால், நாசர், கே.எஸ். ரவிகுமார், விடிவி கணேஷ், சக்தி வாசுதேவன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரித்துள்ளார்.

படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. அப்போது சில திருத்தங்கள் தொடர்பாக மறுதணிக்கைக் குழுவுக்கு படம் அனுப்பப்பட்டதாகவும், தற்போது மறுதணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.