யாழ்ப்பாணத்தில் திடீரென மயக்கமுற்ற 21வயதுடைய யுவதி உயிரிழப்பு!
Share
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணத்தில் 17ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் திடீரென மயக்கமுற்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு இறந்தவர் ,நாவலர் வீதி, அரியாலையை சேர்ந்த ஆ.வாசவி (வயது 21) என்பவர் என அறியப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் குடல் வருத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அத்துடன் சில்லாலை பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றின் அருட் சகோதரியுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அன்றையதினம் சில்லாலைக்கு சென்றபோது திடீரென மயக்கமுற்றுள்ளார். அதன்பின்னர் அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.













