LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பு தொப்பிகலையில் இராணுவ ரக்கவண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஆண் ஒருவர் உயிரிழப்பு

Share

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு கிரான் தொப்பிக்கலை வீதியில் இராணுவரக்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் 15 ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை (15-11-2026) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ ரக்கவண்டி இராணுவ சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

திகிலிவெட்டை நாகதம்பிரான் வீதி; சேர்ந்த 52 வயதுடைய செல்லத்துரை சுரேஸ்குமார் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சம்பவ தினமான இன்று காலை 8.00 மணியளவில் கிரானில் இருந்து தொப்பிக்கலை நோக்கி பிரயாணித்த போது பிரதேச செயலகத்துக்கு அருகாமையிலுள்ள வீதி வளைவை அண்மித்த பகுதியில் தொப்பிக்கலையில் இருந்து கிரான் நோக்கி பிரயாணித்த இராணுவ ரக் வண்டியும் நேருக்கு நேராக மோதி விபத்துக்கு உள்ளானதையடுத்து சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டதுடன் இராணுவ ரக் வண்டியை செலுத்தி வந்த இராணுவ சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.