LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளிநொச்சியில் விவசாயிகள் மத்தியில் இயந்திர “பரசூட்”முறையிலான நாற்றுநடுகை அறிமுகம்

Share

வடமாகாணத்தில் விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய நடவடிக்கைகளை உட்புகுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை வடமாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இயந்திர “பரசூட்”முறையிலான நாற்றுநடுகை ஆரம்ப நிகழ்வு மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்குற்பட்ட திருவையாறு பகுதியில் 16ம் திகதி அன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவசிறீ கலந்து கொண்டார்.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கே.பிரகாஸ், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் கே.சுஜீவன்,விவசாய ஆராய்ச்சி நிலைய பிரதிப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.