LOADING

Type to search

இந்திய அரசியல்

வி.எஸ் பாபுவின் இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய்

Share

மறைந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபுவின் இறுதி ஊர்வலமானது தொடங்கி நடைபெற்ரு வரும் நிலையில் , ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய், வைகோ பங்கேற்று உள்ளனர்.

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகசட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு (வயது 75), உடல்நலக்குறைவு காரணமாக 2026 நவம்பர் 19 அன்று பிற்பகல் 2:24 மணிக்கு காலமானார்.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளுக்காக சென்னை அமைந்தக்கரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது.

மறைந்த கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வமலமானது தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய், வைகோ ,தமிழக அமைச்சர்கள், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர். இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் வி.எஸ் பாபுவின் உடலை முதலமைச்சர் விஜய் உடலை எடுத்துச் செல்லும் வாகனம் வரை சி.எஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் சுமந்து சென்றார். திருவிக நகர் மின்மயானத்திற்கு மறைந்த வி.எஸ் பாபுவின் உடலானது கொண்டு செல்லப்பட்டது.

திரு.வி.க.நகர் தாங்கல் மின்மயானத்தில் வி.எஸ்.பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.