ரஷியா-உக்ரைன் போரை இந்தியாவால் நிறுத்த முடியுமென டில்லியில் நெதர்லாந்து அமைச்சர் கூறினார்
Share
உக்ரைனுடனான போரை நிறுத்துவதற்கு ரஷியாவை சம்மதிக்க வைக்க இந்தியாவால் முடியும் என்று டில்லியில் நெதர்லாந்து அமைச்சர் கூறினார். நெதர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாம் பெரன்ட்சன், 2 நாட்கள் பயணமாக டில்லிக்கு வந்தார். அவருக்கும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பேச்சவார்த்தை நடந்தது. இந்நிலையில், 2-வது நாளான நேற்று டாம் பெரன்ட்சன் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். ரஷியாவுடனான இந்தியாவின் உறவு குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது: இந்தியாவுக்னெ தனி வரலாறு இருப்பதும், உலக அளவில் அதன் பங்களிப்பு பற்றியும் எங்களுக்கு தெரியும். ரஷியாவு டன் இந்தியாவுக்கு உறவு இருக்கிறது. அதை எங்களுக்கு கூடுதல் மதிப்பாக கருதுகிறோம். அந்த உறவை பயன்படுத்தி, உக்ரைனுடனான போரை நிறுத்துவது அவசியம் என்று ரஷியாவுக்கு காட்டி, போர் நிறுத் தத்துக்கு சம்மதிக்க வைக்க இந்தியாவால் முடியும். இந்த போர், உலக உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. போருக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம். இந்தியாவும், நெதர்லாந்தும் வர்த்தக நாடுகள். கடல்சார் பாதுகாப்பு, கடற்பயண சுதந்திரம் ஆகியவற்றில் பொதுவான கவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். நிச்சயமற்ற உலகத்தில் சவால்களுக்கு தீர்வு காண ஒன்றாக பணியாற்றுவது அவசியம். நாங்களும் அதே சவால்களை கையாண்டு வருகிறோம். பிற நாடுகளை சார்ந்திருப்பதை குறைப்பது, முக்கிய மூலப் பொருட்கள், தொழில்நுட்பம், எரிசக்தி ஆகியவற்றில் அதிக வியூக சுதந்திரத்துடன் இருப்பது எப்படி என்ற சவால்களை சந்திக்கிறோம். டிசம்பர் மாதம் கையெழுத்திடப்பட உள்ள இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், கூடுதல் வாய்ப் புகளுக்கான கதவை திறந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.













