LOADING

Type to search

சினிமா

ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘அசரீரி’ படம் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகிறது

Share

ஃபஹத் ஃபாசில் நடிக்கும்  ‘அசரீரி’ படம் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் “அசரீரி” ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் இயல்பான நடிப்பால் இந்திய அளவில் கவனம் பெற்றுவரும் ஃபஹத் ஃபாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோவிந்தராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்க குமார் கங்கப்பன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். ‘அசரீரி’ திரைப்படம் 2027 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது.