LOADING

Type to search

உலக அரசியல்

சீனாவின் ‘ஷென்சோ-24’ விண்கலம் – 3 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Share

சீனாவின் ‘ஷென்சோ-24’ விண்கலம் – 3 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. வடமேற்கு சீனாவின் ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் ‘ஷென்சோ-24’ விண்கலம், 3 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. மூன்றரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, இந்த விண்கலம் சீனாவின் ‘தியாங்காங்’ விண்வெளி நிலையத்துடன் பாதுகாப்பாக இணைந்தது. டாங் ஹோங்போ தலைமையிலான இக்குழுவில் வூ யி மற்றும் பாகிஸ்தான் விண்வெளி வீரர் முகமது ஜீஷான் அலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விண்வெளி நிலையத்தில் நுண்ணுயிர் பாசி வளர்ப்பு மற்றும் சுயமாகச் சரி செய்யும் கார்பன் பைபர் குறித்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு விட்டு, ஜீஷான் அலி அடுத்த வாரம் பூமிக்கு திரும்புவார். மற்ற சீன வீரர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.