(22-01-2022) கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழி புரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மூன்று உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் ...
(22-01-2022) வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரியார்குளத்தில் நேற்று (21) நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ...
கதிரோட்டம்- 21-01-2022 இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர் பற்றிய வெறுப்பை விட ஒரு ‘பீதி’ யை ஏற்படுத்தும் நிலையே அந்த தீவின் நிலப்பரப்பில் மாத்திரமல்ல உலகின் பல நாடுகளிலிருந்தும் தோன்றியுள்ளதை நாம் அனைவரும் அவதானிக்கும் வகையில் தகவல்களும் செய்திகளும் பரவி வருகின்றன. இலங்கையில் தமிழ் மக்களை அடக்கி ஒழிப்பதில் கங்கணம் ...