போரின் காரணமாக முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக வாழும் இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே 11ம் திகதி திங்கட்கிழமை அன்று ...
நடராசா லோகதயாளன். வடக்கின் 5 மாவட்டங்களிலும் 12 ஆயிரத்து 861 ஏக்கர் நிலமே அரச மற்றும் தனியார் நிலங்கள் படையினர் வசம் உள்ளதாக மேற்படி மாவட்டச் செயலகங்கள் எழுத்து மூலம் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினர் வசம் உள்ள நிலத்தில் வலி.வடக்கில் உள்ள மக்களின் நிலத்தை மக்களிடமே மீள ...
(கனகராஜா சரவணன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம், 11-08 -2026ன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த ...