கனடா தமிழர் மரபியல் நடுவம் நடத்தும் தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாள் வைபவம் எதிர்வரும் 07-01-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெறும். அன்று தமிழ் மரபுத் திங்கள் பாதாதையும் வெளியிடப்படவுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு . அழைக்கப்பெறுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு இங்கு காணப்பெறும் அறிவித்தலைப் பார்க்கவும்
கனடா- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கமானது 1 முதல் 10 வகுப்பு வரை கற்கும் மாணவரின் விமர்சனரீதியாக சிந்திக்கும் திறன்களை மேம்படுத்த கணிதம் மற்றும் பொது அறிவு போட்டிகளை ரொறொன்ரோ(GTA), ஒட்டாவா(Ottawa), மொன்றியல் (Montreal), கோன்வால் (Cornwall) ஆகிய பிரதேசங்களில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ...
தாயகத்தில் வாழும் நலிந்த நோயாளிகளின் இதய சத்திர சிகிச்சைகளுக்காக நிதி சேகரிக்கும் ‘நிவாரணம்’ செந்தில்குமரனின் அடுத்த இசை நிகழ்ச்சி ‘எம்ஜிஆர்-106 இசை நிகழ்ச்சி கனடா ஸ்காபுறோ நகரில் எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கி எம்மவரின் இன்னுயிர் காப்போமாக!