LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் உப்புக்குளத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு.

Share

மன்னார் நிருபர்
(01-10-2026)

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் 1ம் திகதி அன்று (1) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் உப்புக்குளம் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது.

மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.நகுசீன் ஏற்பாட்டில், ஃபா லங்கா பவுண்டேஷன் (FAA LANKA FOUNDATION) பணிப்பாளர் M.H.M பாஹிம் தலைமையில் இடம்பெற்ற குறித்த சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வில் விருந்தினராக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் கலந்து கொண்டார்.

மேலும் மன்னார் பொலிஸ் நிலைய பெண்கள்,சிறுவர் பிரிவு அதிகாரி உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சிறுவர்களின் நிகழ்வுகள் இடம் பெற்றதோடு கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வின் போது மன்னார் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கல்வி கற்று உயர் தரத்தில் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி முஹமட் ரிஸா இஸ்ரதானு,2026 நடைபெற்ற G.C.E O/L பரீட்சையில் 9A பெற்ற சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவன் M.R.M. நியாஸ் மபாஸ் பளு தூக்கும் போட்டியில் 2026 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தை பெற்ற அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர் J. இனாமுல் ஹஸன் ஆகிய மூவரும் கௌரவிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.