விஜய் சேதுபதியின் அடுத்த படமான விஜெஎஸ் 50-ன் தலைப்பு வெளியானது. ‘குரங்கு பொம்மை’ பட புகழ் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட்டின் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ...
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘குஷி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு பதாகை வெளியிட்டு அறிவித்திருந்தது. ...
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் முன்னோட்டம் வெளியாகி கவனம் ...