LOADING

Type to search

சினிமா

விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா’

Share

விஜய் சேதுபதியின் அடுத்த படமான விஜெஎஸ் 50-ன் தலைப்பு வெளியானது. ‘குரங்கு பொம்மை’ பட புகழ் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட்டின் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த படத்தின் பதாகையும் தலைப்பையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள் தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு காந்தாரா பட புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். நித்திலன் சாமிநாதன் மற்றும் ராம் முரளி இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளனர். மகாராஜா படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முன்னோட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.