LOADING

Type to search

இந்திய அரசியல்

“மருத்துவத்துறை குறித்து விவாதிக்கத் தயார்” – இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் சவால்!

Share

மருத்துவத்துறை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

     சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் காய்ச்சல் வாடுகளை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து, ஆய்வின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மருத்துவத்துறை 41 மாதங்களாக சீரழிந்துள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது: ” அரசு மருத்துவமனைகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது தவறான கருத்து என்றும் உடனடியாக சேலம் மருத்துவமனைக்கு சென்று அவர் எந்த மருந்து குறைபாடு என்று கூறினார்களோ அந்த மருந்து இருப்பு குறித்து வீடியோ பதிவு மூலம் ஆய்வு செய்து காண்பித்திருக்கிறேன். மருத்துவத்துறை சார்பான எந்த குற்றச்சாட்டுக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் நேரடியாக விவாதிக்கத்தயாராக உள்ளேன். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத்தயாராக உள்ளேன். நேரத்தையும் இடத்தையும் நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள். டிங்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.