LOADING

Type to search

உலக அரசியல்

மீண்டும் அமெரிக்க அதிபராகும் டிரம்ப் – ரஷியா சொல்வது?

Share

அமெரிக்க தேர்தல் முடிவுகள் தங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறுகையில், ‘அடுத்த அமெரிக்க அதிபர், அவர் யாராக இருந்தாலும், சொந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதும், அமெரிக்க கடற்கரையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சாகசங்களைத் தேடாமல் இருப்பதும் தர்க்கரீதியானதாக இருக்கும்.

அமெரிக்கக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், எங்களுக்கு ஏதேனும் முன்மொழிவுகள் தோன்றினாலும், ரஷியாவின் நலன்களுடன் பொருந்தக்கூடிய வகையில் அவற்றை ஆய்வு செய்ய நாங்கள் தயாராக இருப்போம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பாக தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரஷியா தனது நலன்களை உறுதியாக பாதுகாக்கும். ஜனநாயக நெருக்கடி மற்றும் சமூகத்தின் பிளவு ஆகியவற்றை அமெரிக்கா கடந்து வர வாழ்த்துகிறேன்’ என்று அவர் கூறினார். இதுதொடர்பாக ரஷியாவின் அரசு செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், “அமெரிக்காவுடனான உறவு மிகுந்த தொய்வு நிலையில் இருந்தாலும் அதனுடன் சுமுக உறவை மேற்கொள்வதற்கான பேச்சுவார்தையை நடத்த ரஷியா தயாராகவே உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக அனைத்தையும் கவனமாக கண்காணித்து ஆராய்வோம். ஜனவரியில் டிரம்ப் அதிபராக வெள்ளை மாளிகைக்கு திரும்பும்போது என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.