LOADING

Type to search

சினிமா

அவதூறு பேச்சு: நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு

Share

ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது அவதூறு கருத்தை பதிவு செய்த பிரபல நடிகை ஸ்ரீரெட்டி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் ஆந்திரா முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறு காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்து வருகின்றனர். காவல்துறை நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தனர். விரைவில் அவரை விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தெரிவித்தனர். ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது அவதூறு கருத்தை பதிவு செய்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.