LOADING

Type to search

சினிமா

மணிரத்னத்தை சந்தித்தது குறித்து அமரன்பட இயக்குநர் உருக்கம்

Share

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்நிலையில், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்து பேசியது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “அமரன் வெளியாகி 100 நாட்கள் ஆக போகிறது. நான் சினிமாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்டதற்கு காரணமே நீங்கள்தான் மணிசார். 2005ல் முதல்முதலாக உங்களுடன்தான் புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பினேன். ஆனால் இந்த புகைப்படத்தை எடுக்க எனக்கு 20 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. உங்களின் போஸ்டரை பார்த்து வியந்ததில் இருந்து… உங்களின் அருகில் நிற்கும் வரை… இந்த தருணத்தில் நான் திகைத்துப் போயுள்ளேன். அமரன் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி மணிசார்” என்று பதிவிட்டுள்ளார்.