சிறப்பாக இடம்பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
Share

மன்னார் நிருபர்
(14-02-2025)
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் 13-02-2025 வியாழக்கிழமை( மதியம் 1.45 மணி அளவில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் சந்தியாகு FSC தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் L.இளங்கோவன் , கௌரவ விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் D.தேவராஜ் , விசேட விருந்தினர்களாக மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால, உதவி கல்வி பணிப்பாளர் ஞானராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது பாடசாலையின் கடந்த மாதங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பழைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
அத்துடன் மன்னார் தள்ளாடி இராணுவத்தினரால் அண்மையில் நடத்தப்பட்ட பாண்ட் இசை போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களின் இசை அணிவகுப்பு நிகழ்வு உள்ளடங்களாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்று வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றது.