LOADING

Type to search

இந்திய அரசியல்

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி…. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

Share

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார். அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  அப்போலோ மருத்துவமனைக்கு சென்று தயாளு அம்மாளை பார்த்து, அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். தொடர்ந்து மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு நேரில் சென்று தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல் நிலை, சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் மு.க.அழகிரி கேட்டறிந்தார். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்து பாட்டி தயாளு அம்மாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.