LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்கா முன்னாள் அதிபர் கென்னடி கொலை தொடர்பான 63 ஆயிரம் பக்க ஆவணங்கள் வெளியீடு

Share

அமெரிக்காவின் 35-வது அதிபரான ஜான் எப் கென்னடி, கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்கிற வாலிபரை காவல்துறை உடனடியாக கைது செய்தனர். நவம்பர் 24-ந் தேதி காவல்துறை காவலில் இருந்த லீ ஹார்வி ஓஸ்வால்ட்டை ஓட்டல் உரிமையாளரான ஜாக் ரூபி சுட்டுக்கொன்றார். கென்னடி கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு அப்போதைய அதிபர் லிண்டன் பி ஜான்சன் இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஒரு ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் கென்னடி கொலையில் லீ ஹார்வி ஓஸ்வால்ட் தனியாக செயல்பட்டார் என்றும், வேறு எந்த சதியும் இல்லை என்றும் கூறி விசாரணையை நிறைவு செய்தது. எனினும் கென்னடி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை. இதனால் வரலாற்று ஆசிரியர்கள் இதில் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கென்னடி கொலை தொடர்பான விசாரணை ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அதற்கான நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார். இதையடுத்து கென்னடி கொலை தொடர்பான 63 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவண தொகுப்பு இணையத்தில் வெளியிடப்பட்டது.