திருப்பதி ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்” – பவன் கல்யாண்!
Share
திருப்பதி ஏழுமலையானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக, ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்தது குறித்து நான் மிகவும் வேதனையடைந்தேன். அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தில் வலிமை தருமாறு வெங்கடேசப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன். இந்த தருணத்தில், நான் கடவுளிடம் மன்னிப்புக் கோரி, பரிகார சபதம் எடுத்து, 11 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கிறேன். 11 நாள் பரிகார தீட்சை முடிவில் அக்டோபர் 1, 2-ம் தேதிகளில் திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.