தி.மு.க- த.வெ.க இடையே போட்டி என்பது விஜயின் பேராசை- செம்மலை
Share

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்,” அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்” என்றார். இந்நிலையில் விஜய்யின் உரைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பதிலடி கொடுத்துள்ளார். அப்போது அவர்,” திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே போட்டி என்பது விஜயின் பேராசை” என்றார்.