LOADING

Type to search

உலக அரசியல்

செங்கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் – 6 பேர் மரணம்

Share

எகிப்தின் பிரபலமான செங்கடல் இடமான ஹுர்கடாவில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக செங்கடல் கவர்னரேட் வெளியிட்ட அறிக்கையின்படி, அவசரகால குழுவினர் 29 பேரை மீட்க முடிந்தது. சுற்றுலா நடைபாதை பகுதியில் உள்ள கடற்கரைகளில் ஒன்றில் இருந்து பயணித்த நீர்மூழ்கிக் கப்பல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 45 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. எகிப்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா ஒரு முக்கிய துறையாகும், ஆனால் பல சுற்றுலா நிறுவனங்கள் இப்பகுதியில் மோதல்களால் ஏற்படும் ஆபத்துகள் காரணமாக செங்கடலில் பயணிப்பதை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.