LOADING

Type to search

உலக அரசியல்

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து.. 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Share

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்துக்கு அருகே உள்ள கண்டெய்னர் யார்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலரும் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர் வெடி விபத்தில் அதிர்வலையானது பல கிலோமீட்டனர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக துறைமுகத்தில் ஒரு அதிகளவு கரும்புகை காணப்பட்டது.